இன்றைய ராசிபலன்கள்!! இந்த ராசிக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்!!

0
97

இன்று உங்களது ராசிப்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் :
இன்று தேவையற்ற பிரச்சினைகளில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். மேலும், எல்லா காரியங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள் மற்றும் நோய்கள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் :3 ,6 ,9

ரிஷபம் :
திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை மற்றும் தீமை பற்றிய கவலை இல்லாமல் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது, சில நேரத்தில் விபரீதமான எண்ணங்கள் தோன்றலாம், கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம் ,ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள் :6 ,9

மிதுனம் :
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் செயல்படுவது மன வலிமை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம் ,பச்சை அதிர்ஷ்ட எண்கள் :2 ,7

கடகம் :
கணவன் மற்றும் மனைவி இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் நீங்கும். குடும்ப உறவினர்களால் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். மேலும், மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் ,நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3 ,5

சிம்மம் :
நன்மை, தீமை பற்றி கவலை ஏதும் இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது உங்களுக்கு நல்லதை தரும். வெகு நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாய் நீங்கள் இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும் போது உங்களுக்கு மிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு ,வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் :1 ,3 ,9

கன்னி :
இன்று உங்களுக்கு எதிலும் வெற்றிகிடைக்கும். செய்த செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதுரியம் மற்றும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதை செய்வது மற்றும் எதை விடுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் :வெளிர் நீலம் ,மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் :4 ,6

துலாம் :
எதிலும் சோர்வும் உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை நீங்கள் தவிர்ப்பது மிக நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலமாக தொழிலும் லாபமும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் ,பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3 ,5

விருச்சிகம் :
போட்டிகளை தவிர்த்து துணிச்சலான முடிவுகளை நீங்கள் எடுக்க நினைப்பீர்கள். அவர்கள் கூறுவது தடுமாற்றம் நிதானமாக யோசித்து செய்வது நன்மை பயக்கும். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை ,ப்ரவுன் அதிர்ஷ்ட எண்கள் :2 ,6

தனுசு :
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சில விஷயங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த பழைய பகைகள் மாறும்.
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு ,பச்சை அதிர்ஷ்ட எண்கள் :1 ,6 ,5

மகரம் :
இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு நீங்கள் அதை அப்படியே செய்வது என்று மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை நீங்கள் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை தரும். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளைக் கேட்டு மாற்றமடையாமல் நீங்கள் சுயமாக யோசிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் ,பச்சை அதிர்ஷ்ட எண்கள் :3 ,5 ,9

கும்பம் :
அனைத்து பிரச்சினைகளும் இன்று உங்களுக்கு தீரும். எதிர்பார்ப்புகளை மற்றும் யோசனைகளை செயல்படுத்த எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாதகமான பலன்களை பெறுவீர்கள். செயல் திறன் மிக அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை ,சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் :6 ,9

மீனம் :
இன்று உங்களுக்கு எதிராக செயல்படும் சூழல் இருப்பதால் மிக கவனமாக இருப்பது நல்லது. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். மேலும் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு ,நீலம் அதிர்ஷ்ட எண்கள் :3 ,9