இன்றைய ராசி பலன்- 09-09-2020
நாள் : 09-09-2020
தமிழ் மாதம்:
ஆவணி 24, புதன்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.
இராகு காலம்:
மதியம் 12.00 முதல் 1.30 வரை.
எம கண்டம்:
காலை 7.30 முதல் 9.00 வரை.
குளிகன்:
பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை,
திதி:
சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
நட்சத்திரம்:
கிருத்திகை நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு ரோகிணி.
அமிர்தயோகம் பகல் 11.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீர்வுக்கு வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன வழியில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் தேவையற்ற விஷயங்களை நினைத்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதனால் நன்மை உண்டாகும். பயணங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய அவசியம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுடைய இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும்.
துலாம்
துலா ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மூலம் சில தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடரும். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை நடக்கும். உத்தியோகத்தில் புதிய இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் பணப்புழக்கம் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களுடன் இணக்கமாக செல்வதன் மூலம் ஆதாயம் காணலாம்.