ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

0
71

*கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும்.

*ரவா, மைதா சேமித்து வைக்கும் டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது.

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும்.

*கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும்.

*தோசைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைத்தால் தோசை மெல்லியதாகவும் சுவையாகவும் இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத அரைக்கரண்டி தயிரை சேர்த்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

*மீன் சமைக்கும்போது எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சமைத்தாள் மீன் கருக்காமல் சுவையாக இருக்கும்.

*மோர் குழம்பு செய்யும் போது சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கினால் ருசி கூடுதலாக இருக்கும்.

*கத்தரிக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவு தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினாள் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

*கீரை வகைகளை சமைக்கும் போது மூடி போட்டு மூடக்கூடாது.

author avatar
Parthipan K