இன்றைய ராசி பலன் 17-09-2020 Today Rasi Palan 17-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 17-09-2020

நாள் : 17-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 01, வியாழக்கிழமை

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

எம கண்டம்:

காலை 6.00 முதல் 7.30 வரை.

குளிகன்:

காலை 9.00 முதல் 10.30 வரை,

திதி:

அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்:

பூரம் நட்சத்திரம் காலை 09.48 வரை பின்பு உத்திரம்.

சித்தயோகம் காலை 09.48 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மஹாளய அமாவாசை.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் சுலபமாக செய்து காட்டி விடுவீர்கள். கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை அதிக கவனத்துடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகி வரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே தரவல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் தேவையற்ற விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடிய தன்னம்பிக்கை மிகுந்த நாளாக அமைய இருக்கிறது. உங்களின் மனோதிடம் உங்களை சுற்றி இருப்பவர்களை வியக்க செய்யும் வண்ணம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் முன்னேற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கமான நட்பு ஏற்படும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருப்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வம்பு வழக்குகள் போன்றவற்றிலிருந்து தூரமாக இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 03.07 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களின் வேடிக்கையான பேச்சு மற்றும் சாதுரியமான குணம் மற்றவர்களை உங்கள்பால் ஈர்ப்பதற்கு வசதியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் படிப்படியாக நீங்கும்.