இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியம் கைகூடும் நாள்!! இன்றைய(09.10.2021) ராசிபலன்கள்!!

0
166

இன்று(09.10.2021) 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் குறித்து காணலாம்.

மேஷம்: மேஷராசிக்காரர்கள் வியாபாரம் குறித்த பணிகளில் மிகுந்த நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பல்வேறு இறந்தகால நினைவுகளின் மூலமாக உங்களது செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படக்கூடும். உடன் இருப்பவர்கள் குறித்த புரிதல் உண்டாகும் நேரமிது. ஆராய்ச்சி பற்றிய செயல்பாடுகளில் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று பதட்டமின்றி செயல்பட வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கப் போகிறது. சமூகம் குறித்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் நாள் இது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் மூலமாக வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளினால் உங்களுக்கு லாபம் ஏற்படும். பெற்றோரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். புதிய சிந்தனைகள் மூலம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்: இன்று உறவினர்கள் பற்றி நிறைய விஷயங்கள் உங்களுக்கு புலப்படும். உடல் ஆரோக்கியம் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக பணிகளில் திடீரென்று ஈடுபாடு ஏற்படும். திடீர் செலவுகளும் உண்டாகும். அந்த திடீர் செலவுகளை சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவது நல்லது.

சிம்மம்: இன்று சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப உறவுகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படும். உங்கள் மனதில் புதிய புதிய ஆசைகள் ஏற்படும். உறவினர்களால் சந்தோஷமான நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் இழுபறி காரியங்கள் நிறைவேறும். வர்த்தகம் பற்றிய பணிகளில் லாபம் உண்டாகும். இது உங்களுக்கு ஆதாயத்தை தரக்கூடிய நாள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கல்வி குறித்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் நாள். கால்நடைகளை பற்றி அக்கறை வேண்டும். எதிர்பார்த்த கடன் மற்றும் உதவிகள் வந்து சேரும்.

துலாம்: என்று துலா ராசி காரர்களுக்கு அங்கீகாரங்களும் பாராட்டுகளும் கிடைக்கும். இளைய சகோதரர்கள் மூலமாக ஆதரவான சூழல்களும் உதவியும் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் மிகுந்த லாபம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்: என்று விருச்சிக ராசிக்காரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க கூடிய நாள். கல்வி குறித்த விரயங்கள் ஏற்படலாம். வியாபார முதலீடுகள் அதிகரிக்கப் போகிறது. வாகன பயணங்களில் மூலம் புதுப்புது அனுபவங்களை பெறக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு சிந்தனைகளை தூண்டும் விதமாக இருக்கும்.

தனுசு: எதிர்பார்க்கின்ற முயற்சிகளில் பலன் கிடைக்கும். சொத்துக்களை வைத்து நடக்கின்ற வியாபாரம் ஆதாயத்தில் முடியும். வீட்டுப் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். உங்களை அறியாமலேயே வெற்றி வாய்ப்புகளை அடையும் சூழ்நிலை உருவாகும். நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் நாள்.

மகரம்: வேலை குறித்த பணிகளில் கொஞ்சம் பொறுமை இருப்பது அவசியம். எழுத்து குறித்த துறைகளில் சாதகமான சூழ் நிலை ஏற்படக்கூடும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் விரைவில் நீங்கிவிடும். புதிய நபர்களின் மூலம் லாபம் ஏற்படக்கூடிய நாள்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.. மற்றவர்களுக்கு உதவி செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுப காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலை இன்றிலிருந்து உங்களுக்கு ஏற்படும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இது.

மீனம்: நிர்வாகத் துறையில் இருக்கும் மீன ராசிக்காரர்கள் மிகுந்த பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படக்கூடும். சேமிப்பு குறித்த எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் தனவரவு அதிகரிக்கும்.

Previous articleதமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
Next articleஅடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை