இன்றைய ராசி பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு லாபம்.? யாருக்கு புதுமை.?

0
288

இன்றைய (03-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள்.

ரிஷபம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுகங்கள் மேம்படும் நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும் நாள்.

கடகம்

தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வரவுகள் மேம்படும் நாள்.

சிம்மம்

இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதமான நாள்.

கன்னி

பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். முதலீடுகள் மேம்படும் நாள்.

துலாம்

பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள்.

விருச்சிகம்

வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுறுசுறுப்பான நாள்.

தனுசு

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உருவாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

மகரம்

உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மீனம்

இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சஞ்சலமான நாள்.

Previous articleருத்ர தாண்டவம் திரைப்பட விமர்சனம் – PCR சட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியவர்களுக்கு தரமான சவுக்கடி
Next articleதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!