மாண்டஸ் புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Photo of author

By Janani

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் தேதி வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புயல் புதுவையின் அருகே கரையை கடக்கும் என்பதால் அந்த பகுதியிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையில், கனமழையை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.அதே போல தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்