உங்களோட ஆர்டர் தயாராகிவிட்டது!!! லியோ டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

0
102
#image_title

உங்களோட ஆர்டர் தயாராகிவிட்டது!!! லியோ டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

இன்று(அக்டோபர்2) நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கீதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சான்டி, பிக்பாஸ் ஜனனி, பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். அக்டோபர் 19ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது லியோ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.