இன்றைய ராசி பலன் 23.08.2020 Today Rasi Palan 23-08-2020

0
76

இன்றைய ராசி பலன்- 23-08-2020

நாள் : 23-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 07, ஞாயிற்றுக்கிழமை,

நல்ல நேரம்:

காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 4.30 முதல் 6.00 வரை.

 எம கண்டம்: 

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

குளிகன்:

பகல் 3.00 முதல் 4.30 வரை,

திதி:

பஞ்சமி திதி மாலை 05.05 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.

நட்சத்திரம்:

சித்திரை நட்சத்திரம் மாலை 05.06 வரை பின்பு சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரிஷி பஞ்சமி விரதம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. குடும்பத்துடன் வெளியிட பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.

author avatar
Kowsalya