இன்று நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார்.
கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஆண்டு பொதுக்கூட்டம் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பங்கேற்காமல், மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.மெய்நிகர் முறை என்பது உலக தலைவர்கள் அனைவரும் தங்களது உரைகளை முன்கூட்டியே வீடியோவாக பதிவிட்டு, அதனை அக்கூட்டத்தில் ஒளி பரப்பும் வகையில் நடத்தப்படயிருக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்திய நேரப்படி மாலை 6.30 மணி ஆகும்.
அடுத்த இரண்டு வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில், ஆண்டு பொதுக் கூட்டத்தில் பொது விவரங்கள் கேட்டு, இறுதி செய்யப்படும் என்றும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய போது கூட்டமானது, செப்டம்பர் 29 வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும்,பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசும் முதல் உலகத் தலைவராக நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டுள்ளது.