இன்று என்ன தினம் தெரியுமா?

Photo of author

By Parthipan K

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

ராஜபாளையத்தை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் தற்போது புலிகளின் கணக்கெடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி  இன்று புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் நிலையில் இந்த சரணாலயத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் புலிகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும், மலைசார்ந்த அடர்த்தியான பகுதிகளாகவும் மேற்கு தொடர்ச்சி மலை விளங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தொடர் கண்காணிப்பு, வேட்டை தடுப்பு மற்றும் தேவையான உணவு இப்பகுதியில் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வழிவகுத்துள்ளது. எனவே, தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.