இந்தியாவில் புதிதாக 73,521 பேருக்கு கொரோனா: 1,133 பேர் உயிரிழப்பு!

0
131

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,80,423 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 73,521. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 33,23,950 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 8,83,697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,98,621 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,06,50,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!
Next articleகருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!