மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

0
60

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

கேரளாவில் கொரோனா பாதித்த பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் அருகே குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் நர்சாக மலப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தன்னுடைய ஊருக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். மருத்துவர்கள் அவருக்கு கொரோனா உறுதி செய்ததை அடுத்து 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

பல நாட்கள் தனிமைப்படுத்திய பின் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்ததால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சுகாதார ஆய்வாளர் பிரதீப், வீட்டிற்கு வந்தால்தான் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தர முடியும் என்று சொன்னதனால் நம்பி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்தப் பெண் உள்ளே நுழைந்ததும் கதவை பூட்டி விட்டு பெண்ணின் கழுத்தில் தாக்கி, கீழே தள்ளிவிட்டு, இரு கைகளையும் கட்டிவிட்டு, வாயில் துணியை சொருகிவிட்டு மற்றும் கால்களையும் கட்டி விட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்துள்ளனர்.

பிரதீப்பை சுகாதார ஆய்வாளர் பணியில் இருந்து பணிநீக்கம் செய்து கேரள சுகாதார அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் டிரைவரால் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளதால் கேரள மக்களிடையே இச்சம்பவம் மிகவும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.