இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

0
151

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 86,752 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 43,03,044 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 10,10,821 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,06,806 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,36,61,060 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!
Next articleSports Authority of India -வில் காலிப்பணியிடங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here