தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

0
197

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பரிசோதனை முடிந்து இன்று மாலைக்குள் துணை முதல்வர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். கடந்த மே மாதம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Previous articleஎன்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here