இந்தியாவில் ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; இதுவரை 87,882 பேர் உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

இந்தியாவில் ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; இதுவரை 87,882 பேர் உயிரிழப்பு!

Parthipan K

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,87,580 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,130 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 87,882 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 93,356 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 43,96,399 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 10,03,299 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,31,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,43,92,594 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.