இந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

0
155

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,21,245 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,868 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 27,74,801 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,46,278 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4,23,07,914 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!
Next articleவயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்றயே எப்படிமா! போட்டோவை பார்த்து கதிகலங்கிய ரசிகர்!