தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று தொற்று காரணமாக 88 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,836 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,820 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 4,04,186 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய தேதியில் 51,458 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 85,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 52,98,508 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,41,654 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 17 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,862 ஆக உள்ளது.