எந்த விதத்திலும் இனி டிரம்பை நம்புவது அவசியமில்லை

0
215

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் டிரம்பை, கமலாஹாரிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிபுணர்களின் கருத்தை அடக்குவதில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதுபோன்று வரும் காலத்தில் தடுப்பூசி விவகாரத்திலும் நிகழக்கூடும். கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்துக்கு முன்பாக கிடைத்தால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் டிரம்பின் வார்த்தையை நான் நம்ப மாட்டேன். நம்பகமான ஒருவர் அதற்காக உறுதி அளித்தால் மட்டுமே நம்புவேன். ஆனால் டிரம்பை நம்ப மாட்டேன்.

Previous articleதமிழகத்தில் புதிதாக 5783 பேருக்கு கொரோனா; மேலும் 88 பேர் பலி: இன்றைய நிலவரம்!!
Next articleஅமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here