தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.74 லட்சத்தை கடந்தது: இன்றைய நிலவரம்!!

0
130

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 87 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,599 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 50,213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,43,602 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,896 ஆக உள்ளது.

Previous articleஇங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?
Next articleகொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல