தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை: இன்றைய நிலவரம்!!

0
144

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 53 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,799 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 4,53,165 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 46,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 59,68,209 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,583 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 23 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,992 ஆக உள்ளது.

Previous articleபொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!
Next articleமாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!