பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

0
76

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும்,
இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.மேலும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ம் தேதி வரையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைகழகம் கூறியிருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கும் இறுதி பருவ தேர்வு,எழுதும் நேரத்தையும்,எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பதனை குறித்தும் அண்ணா யுனிவர்சிட்டி தகவலை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தகவலின் அடிப்படையில்,இறுதி செமஸ்டர் தேர்வில் மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும் என்றும்,அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் விடை அளித்தால் போதும் என்றும்,இந்த தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் பொறியியல் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.60 நிமிடத்தில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra