தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

0
189

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 96 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,031 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,74,172 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,770 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,194 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,20,820 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleஎங்களுக்கு போரை தூண்ட எந்த எண்ணமும் இல்லை
Next articleஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here