தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

0
188

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,129 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 53,282 பேர் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 42,76,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,677 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் 23 பேர் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2,603 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleசெய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்
Next articleசேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here