ஐபிஎல் இன்றைய போட்டி!! ராஜஸ்தானை எதிர்கொள்கிறது குஜராத்!!
இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெடீ வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முந்தைய போட்டிக்கு பழி தீர்க்கும் விதத்திலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று களமிறங்கவுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
இரண்டு அணிகளிடமும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடும் போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றிகள் 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.