இன்று சந்திரகிரகணம்.. கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது!!

இன்று சந்திரகிரகணம்.. கர்ப்பிணி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது!!

இன்று அதாவது மே 5ம் தேதி சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சூரிய கிரகணம் நடந்து முடிந்தது. அதற்குள் இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் சித்திரா பௌர்ணமி அன்று அதுவும் இன்று மே 5ம் தேதி நிகழப் போகின்றது.

இன்று நடைபெறப் போகும் இந்த சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணம் ஆகும். இது இந்தியாவில் தெரியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியா, அண்டார்டிகா ஆகிய ஐந்து கண்டங்களில் இருக்கும் மக்களுக்கு தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியும்.

உலக நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 3.30 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணியளிவில் முடிகிறது. இந்திய நேரப்படி இரவு 8.45.மணியளவில் தொடங்கி 1 மணியளவில் முடிகின்றது. சந்திர கிரகணத்தின் உச்ச நேரம் 10.52 மணிக்கு என்று கணிக்கப்பட்டுள்ளது.

கிரகணம் நடக்கும் நேரத்தில், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்றவர்கள், மாதவிடாய் உள்ள பெண்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கிரகணம் நடக்கும் நேரத்தில் ஆடு, மீன், கோழி போன்ற அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அசைவ உணவுகள் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். அதுவும் கிரகணத்தின் பொழுது அசைவ உணவுகளை உண்டால் அது செரிமானக் கோளாறு பிரச்சனையை கொண்டு வந்து விடும்.

கிரகணம் நடக்கும் நேரத்தில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். தோசை, இட்லி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். இது மூலமாக எளிதில் செரிமானம் ஆகும்.

கர்ப்பிணிப் பெண்கள் இன்று இரவு எந்தவித தவிர்க்க முடியாத வேலையாக இருந்தாலும் இன்று மட்டும் வெளியே வரவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் கையில் தர்பைப் புல்லை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அது இல்லதா பட்சத்தில் அருகம்புல், வேப்பிலை போன்றவற்றை கையில் வைத்துக் கொள்ளலாம்.

நாளை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கும் நீரில் துளசி போட்டு குடிக்கலாம். அதே போல் குளிக்கும் நீரில் உப்பு, வேப்பிலை போன்றவற்றை போட்டு குளிக்கலாம். இதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.