இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!!

Photo of author

By Parthipan K

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த விதமான மாற்றமும் இல்லை நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி கச்சா எண்ணெய் நிறுவனங்களேப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது, இதனால் இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்திருக்கிறது.தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டிசலின் விலையேற்றத்தைச் சந்தித்து வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளார்கள் இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.4 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 94.39 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.