எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது.
இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டா முயற்சி குறித்து எலன் மஸ்க் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
தகவல் தொடர்புகளில் புதிய பரிவினாமத்தை அடைவதற்கான ஒரு முயற்சியாக இது செயல்படும் என கூறியவர் மேலும், இதன் மூலம் கிடைக்கும் சேவையை அனைத்து வகையான செல்போன்களிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இந்த பீட்டா முயற்சி ஆனது வெற்றி பெறும் தருணத்தில் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் நேரடியாக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கக்கூடிய இணைய சேவையானது 2ஜிபி என்ற அளவை விட வேகமாக இணைய சேவை கடைக்கும் வேகமாக இணைய சேவை கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.