நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை வழக்கம் போல இயங்கும்.

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3:30 மணியில் இருந்து 4:30 மணிக்குள் இலங்கை திரிகோணமலைக்கு அருகே மட்டக்களப்பு பகுதியில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில்   தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலைய ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 3.2.2023 ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment