நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் அப்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.தேர்வுகளையும் ஆன்லைனில் தான் நடத்தினார்கள்.
நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளனர்.தேர்வுகளும் நேரடியாகவே நடந்தது.இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
அந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே நள்ளிரவு 2 மணியளவில் கரையை கடந்தது அதனால் தமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வு நெருங்கி வருவதால் பாடப்பகுதிகள் முழுமைபெறாமல் இருக்கின்றது.
இவ்வாறு அதிகளவு விடுமுறை விடுவதினால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 9 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதிற்கு பதிலாக நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.