நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

0
126
#image_title

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் இருந்து இராமேஸ்வரத்திற்கு இன்று(அக்டோபர்13) பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், பெங்களூரு, கோவை ஆகிய இடங்களுக்கு நாளை(அக்டோபர்14) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இதைப் போல வார இறுதி நாட்கள் வருவதை முன்னிட்டு சென்னையில் இருந்து மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு வழக்கமாக செல்லும் பேயுந்துகளுடன் இன்று(அக்டோபர்13) கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அதே போல கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஆக மொத்தமாக 600 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அதே போல சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மக்கள் திரும்புவதற்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 8058 பயணிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அக்டோபர் 15ம் தேதி ஒரு நாளில் மட்டுமே 6138 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்வதற்காக காத்திருக்கின்றனர். கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்று அந்தஸ்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஉலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி!!! புள்ளிப்பட்டியலில் பாதளத்திற்கு சென்ற ஆஸ்திரேலியா!!!
Next articleரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!!