பல் சொத்தை? ஈறுகளில் இரத்த கசிவு? இன்றிலிருந்து இந்த பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

பல் சொத்தை? ஈறுகளில் இரத்த கசிவு? இன்றிலிருந்து இந்த பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் பண்ணுங்க!!

நம் முகத்திற்கு அழகை அள்ளி கொடுப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது.பற்கள் துர்நாற்றமின்றி வெள்ளையாக காணப்பட்டால் ஒரு வித தன்னம்பிக்கை பிறக்கும்.பிறரின் அருகில் நின்று பேசுவதில் தயக்கம் ஏற்படாது.

ஒருவேளை பற்களில் அழுக்கு,சொத்தை பல் துர்நாற்றம் ஏற்பட்டால் வாயை திறக்கவே அசௌகர்யமாக இருக்கும்.வாய் துர்நாற்ற பிரச்சனையால் நமக்கு நெருக்கமானவர்களின் அன்பை இழக்க நேரிடும்.தினமும் இருமுறை பல் துலக்கியும் எந்த ஒரு பலனும் இல்லை என்று கருதுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பேஸ்ட்டை கொண்டு பற்களை துலக்குங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – 2
2)கிராம்பு – 2
3)பட்டை – 1
4)கல் உப்பு – சிறிதளவு
5)சின்ன வெங்காயம் – 1
6)பூண்டு பல் – 1
7)நல்லெண்ணெய் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் இரண்டு கொய்யா இலையை நீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பல்லை தோல் நீக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

அதன் பின்னர் 2 கிராம்பு மற்றும் ஒரு துண்டு பட்டையை எடுத்துக் கொள்ளவும்.இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் சிறிது கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய்ய அரைக்கவும்.பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்/

இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யவும்.பின்னர் பல் துலக்கும் பிரஷில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து பற்களை துலக்கி வந்தால் சொத்தை,ஈறு வீக்கம்,பல் ஆடுதல்,மஞ்சள் கறை உள்ளிட்ட பல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

மூலிகை பற்பொடி பயன்படுத்த விரும்பினால் காய்ந்த கொய்யா இலை,கிராம்பு,பட்டை,சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியில் பற்களை துலக்கி வந்தால் பல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.