2024-ஆம் ஆண்டு தொடங்கத்தில் அதாவது முதல் பாதி வருடத்தில் எந்த ஒரு படமும் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த பாதி ஆண்டில் மிக பெரிய ஹிட் படங்கள் திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அதில் முதல் 10 படங்கள் அதன் வசூல் ஆகியவை பார்க்கலாம்.
- முதலாவதாக விஜய் நடித்து வெளியான தி கோட் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வசூல் 448 கோடி என பாக்ஸ் ஆபீஸ் கூறியுள்ளது.
- இரண்டவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் தான். அதன் வசூல் 340 கோடி ஆகும்.
- மூன்றாவது திரைபடம் ரஜினி நடித்த வேட்டையன். அந்த படம் 265 கோடி வசூல் செய்தது.
- நான்காவது திரைப்படம் விஜய் சேதுபதி நடித்து உலகமெங்கும் வெளியான மகாராஜா படம். இந்த படம் 178 கோடி வசூல் செய்தது.
- ஐந்தாவது திரைப்படம் தனுஷ் நடித்த ராயன் படம். அந்த படம் 155 கோடி வசூல் செய்தது.
- ஆறாவது திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன்-2. இந்த படம் 150 கோடி வசூல் சாதனை செய்தது.
- எழாவது ஆறாவது சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் 120 கோடி வசூல் செய்தது.
- எட்டாவதாக இடத்தில் சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை-4 திரைப்படம் 105 கோடி வசூல் செய்தது.
- ஒன்பதாம் இடத்தில் சியன் விக்ரம் நடித்து வெளியான தங்கலான் படம் 80 கோடி வசூல் செய்தது.
- பத்தாவது இடத்தில் அருள் நிதி நடித்து வெளிவந்த டிமாண்டி காலனி-2 இந்த படம் 60 கோடி வசூல் செய்தது.