உங்கள் ஓல்டு காரின் ரீசேல் மதிப்பை அதிகரிக்க இந்த டாப் 10 டிப்ஸை பின்பற்றுங்கள்!

0
83
Top 10 Tips to Increase Resale Value Of A Car
Top 10 Tips to Increase Resale Value Of A Car

உங்கள் ஓல்டு காரின் ரீசேல் மதிப்பை அதிகரிக்க இந்த டாப் 10 டிப்ஸை பின்பற்றுங்கள்!

உங்களிடம் இருக்கின்ற பழைய காரை விற்கும் எண்ணம் இருந்தால் அதற்கு உரிய ரீசேல் மதிப்பில் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். தங்களின் அவசத்திற்காக காரின் விலையை குறைத்து கேட்டால் விற்று விடாதீர்கள்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி உங்கள் காரின் ரீசேல் மதிப்பை அதிகரியுங்கள்.

  1. விற்பனை செய்யும் காரை சுத்தப்படுத்தல்

நீங்கள் காரை விற்க முடிவு செய்து விட்டால் அதை கழுவி சுத்தமாக வைப்பது முக்கியம்.இதனால் கார் வாஷ் ஸ்டேஷனில் கொடுத்து முழுமையாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

2. காரின் உண்மை விவரம்

உங்கள் காரின் பராமரிப்பு விவரங்கள்,காரின் பின்னணி(கார் மாடல்,தயாரிப்பு ஆண்டு),கார் எவ்வளவு கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கிறது என்ற காரின் உண்மை விவர ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

3. காரின் விலை

நீங்கள் விற்க போகும் காரின் சந்தை மதிப்பு குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இதை வைத்து உங்கள் காரின் ரீசேல் மதிப்பை கணக்கிட வேண்டும்.ஒருவேளை உங்கள் காரின் ரீசேல் மதிப்பு தெரியவில்லை என்றால் கார் ரீசேல் செய்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4. ப்ரோக்கர் செலவை குறைத்தல்

உங்கள் காருக்கான விலையை நீங்கள் தான் முடிவு செய்து காரை விற்பனை செய்ய வேண்டும்.கார் ப்ரோக்கர் மூலம் விற்பனை செய்ய நினைத்தால் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.

5. பொறுமை அவசியம்

நிர்ணயித்த காரின் விலையை விட குறைவான விலைக்கு கேட்டால் அவசரப்பட்டு விற்றுவிடாதீர்கள்.நீங்கள் குறித்த நியாமான விலைக்கு கார் விற்பனை நடக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.

6. காரின் ஒரிஜினல் ஆவணங்கள்

உங்கள் காரின் ஒரிஜினல் ஆவணங்கள்,ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்,கார் பெயரில் லோன் வாங்கி முறையாக செலுத்திய விவரங்களை வைத்திருத்தல் அவசியமாகும்.இதனால் உங்கள் காரின் மதிப்பு மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.

7. லைட்டை மாற்றுதல் அல்லது சுத்தம் செய்தல்

விற்க தயாராகவுள்ள காரின் லைட்டை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையானால் லைட்டை மாற்றவும் செய்யலாம்.

8. டயரை மாற்றுதல்

காரின் டயர்கள் தேய்மானம் அடைந்திருந்தால் விற்பதற்கு முன் அதை மாற்றலாம். இது வாங்கும் நபர் உங்கள் காரை ஓட்டிப் பார்க்கும் போது நல்ல அபிப்ராயத்தை கொடுக்கும்.

9. காரின் உள்பக்கம்

காரின் வெளித்தோற்றத்தை சரியாக வைப்பது போல உள்தோற்றத்தையும் முறையாக பராமரித்து வைத்துக் கொள்ளலாம்.

10. காரின் போட்டோ

காரை ஆன்லைன் மூலமாக விற்பதாக இருந்தால் நல்ல போட்டோக்களை எடுத்து அப்லோட் செய்யவும்.