நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!
சினிமாவில் நடிப்பதற்காகவே தான் செய்து வந்த சொந்த வேலையை உதறித் தள்ளி தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் டாப் 5 நடிகர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. நடிகர் ரஜினிகாந்த்…
தற்பொழுது உலகம் முழுவதும் அறியக் கூடிய நடிகராக சூப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல கதாப்பாத்திரங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தற்பொழுதும் நடித்து வருகிறார்.
இருப்பினும் மக்கள் மனதில் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் வந்த பரட்டை என்ற கதாபாத்திரத்தில் இன்றளவில் இருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறையில் வருவதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக அதாவது பஸ் கண்டக்டராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த சினிமாவில் நடித்து உயர வேண்டும் என்பதற்காக பஸ் கண்டக்டர் வேலையை உதறித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. நடிகர் மம்மூட்டி…
மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்மூட்டி அவர்கள் தற்பொழுது வரை இளமை குறையாமல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நடிகர் மம்மூட்டி அவர்கள் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் வக்கீல் அதாவது வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. நடிகர் நிதின் பாலி
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் நிதின் பாலி அவர்கள் பிரேமம் படம் மூலமாக பிரபல நடிகராக மாறினார் என்று கூறலாம். பிரேமம் திரைப்படம் நடிகர் நிதின் பாலி அவர்களுக்கு சினிமாவில் நல்ல இடத்தை பெற்றுத் தந்தது.
நடிகர் நிதின் பாலி தற்பொழுது ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நிதின் பாலி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. நடிகை நயன்தாரா…
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக நயன்தாரா அவர்கள் மாறியுள்ளார்.
தற்பொழுது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. நடிகர் ரக்சித் ஷெட்டி…
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ரஞ்சித் ஷெட்டி அவர்கள் சார்லி என்ற திரைப்படம் மூலமாக பிரபல நடிகராக மாறினார்.
நடிகர் ரஞ்சித் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சப்டா சகரதாச்சே எல்லோ சைட் பி’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ரஞ்சித் ஷெட்டி நடிப்பதற்கு முன்னர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.