கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!

0
185

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!

 

தமிழ் திரையுலகில் 40 வயதை தாண்டிய பல நடிகைகள் சொந்த காரணங்களால் திருமணமே வேண்டாம் என்று தற்பொழுது வரை சிங்கிள் லைப்பை சந்தோசமாக அனுபவித்து வருகின்றனர்.மேலும் கல்யாணம் செய்து கொண்டு ஒருவரை சார்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்ந்து விடலாம் என்று தற்பொழுது ராணியைப் போல் வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகளின் விவரம் இதோ.

 

இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் தபு

இவர் தமிழில் காதல் தேசம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,சிநேகிதியே,இருவர் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.மேலும் தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம், வங்காளம்,மராத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் 90 கால கட்டங்களில் கொடிகட்டி பரந்த நடிகை தபு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று கிசுகிசுக்க பட்டார்.மேலும் மறைந்த பாலிவுட் நடிகை திவ்யபாரதி மற்றும் அவரது கணவர் சஜித் நதியத்வாலா ஆகிய இருவருக்கும் நெருங்கிய தோழியாக தபு இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது கணவர் சஜித் நதியத்வாலாவுடனும் கிசுகிசுக்க பட்டார்.இவர் பொதுவாக திருமணமான நடிகர்களுடன் அதிகம் கிசுகிசுக்க பட்டுள்ளார்.இந்நிலையில் 52 வயதாகும் தபு தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

 

இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருபவர் சதா

இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.மேலும் உன்னாலே உன்னாலே,அந்நியம்,பிரயசகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழ் படங்களில் நடிகர் மாதவன்னுடன் நடித்த பொழுது கிசுகிசுக்க பட்டார்.தற்பொழுது 39 வயதாகும் சதா தனக்கு திருமணம் செய்து கொள்ள எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சிங்கிள் வாழ்க்கையே தனக்கு சந்தோசம் தருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் கோவை சரளா

இவர் 30 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பயணித்து வருகிறார்.தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இவர் வடிவேலு,விவேக்,கவுண்டமணி,செந்தில் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது கோவை பாசை மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர்.நடிப்பை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்பொழுது 61 வயதாகும் கோவை சரளா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

 

இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் இருப்பவர் கௌசல்யா

இவர் விஜய்,முரளி,பிரபு தேவா உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து அனைவருக்கும்

பரிட்சயமான நடிகை ஆனார்.மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.மேலும் கவர்ச்சி காட்டாத நடிகைகளில் ஒருவராக 90களில் வலம் வந்தார்.இதனை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் தற்பொழுது 39 வயதாகும் கௌசல்யா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.திருமணம் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ள தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் சித்தாரா

இவர் புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து புது வசந்தம்,புது புது ராகங்கள் போன்ற படங்களில் ஹீரோவுக்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பெரும்பாலான படங்களில் இவருக்கு ஹீரோவுக்கு தோழி மற்றும் ஹீரோவுக்கு தங்கை இது போன்ற கதாபாத்திரங்களே அமைந்தது.மேலும் இவர் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தற்பொழுது 50 வயதாகும் சித்தாரா இதுவரை எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.இதற்கு சினிமா வட்டாரத்தில் ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது.அது என்னவென்றால் இவர் படங்களில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அவருடன் நடித்த சக நடிகருடன் காதலில் வயப்பட்டுள்ளார்.ஆனால் அவரது காதல் கைகூட வில்லை.இதனால் தான் தற்பொழுது வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று தெரிவித்தனர்.ஆனால் அவரோ தன் தந்தை தான் தன் வாழ்க்கையாக இருந்தார்.அவர் மறைந்த பிறகு தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

Previous articleகாரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…
Next articleசிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் !!