உடல் கொழுப்பை கரைக்கும் டாப் 6 வெஜிடேபுள்ஸ்!! தினமும் தவறாமல் ஒன்று சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

உடல் கொழுப்பை கரைக்கும் டாப் 6 வெஜிடேபுள்ஸ்!! தினமும் தவறாமல் ஒன்று சாப்பிடுங்கள்!!

Divya

உங்கள் உடல் எடை குறைய நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை உணவாக சாப்பிடலாம்.இந்த ஆறு வகை காய்கறிகள் உங்கள் உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது.

1)பூண்டு

நாம் தினசரி பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு.இதில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.பூண்டு சாறு உடலில் இருக்கின்ற எல்டிஎல் என்ற கொழுப்பை அதிகரித்துவிடும்.

2)வெண் பூசணி

இந்த காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணி காயை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கொழுப்புகள் குறையும்.வெண் பூசணி சாறு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்பட வெண் பூசணி சாறு குடிக்கலாம்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் குறைய வெண் பூசணி ஜூஸ் உதவும்.

3)பீட்ரூட்

இதில் புரதம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,மாங்கனீசு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பீட்ரூட்டை அரைத்து ஜூஸாக செய்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் படியாமல் இருக்கும்.

இரத்த உற்பத்தியை அதிகரிக்க பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பீட்ரூட் சாறு குடிக்கலாம்.

4)முட்டைகோஸ்

நார்ச்சத்து நிறைந்த முட்டைகோஸை அரைத்து குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.முட்டைகோஸில் இருக்கின்ற வைட்டமின் கே,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

5)சுரைக்காய்

தண்ணீர் சத்து நிறைந்த சுரைக்காயை ஜூஸாக அரைத்து குடித்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

6)கோவைக்காய்

இதில் பொட்டாசியம்,நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கோவைக்காயை உணவாக சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு வேகமாக குறையும்.