மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

Photo of author

By Preethi

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்க உள்ளது மக்கள் நீதி மய்யம்.

இதற்கான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வேட்பாளர்கள், ஒருங்கிணைப்பு குழு என தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும் திமுகவுடன் கூட்டணி இருந்தாலும் தனது டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிட போவதாக தீர்க்கமாக முடிவெடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

கடந்த இரண்டு தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே உள்ளது. இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றப்படவில்லை.

எனவே கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தையே ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.