தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து உடையது அரசு பங்களா ,காவல்துறை பாதுகாப்பு, வாகன வசதி மற்றும் பயணப்படி மருத்துவ வசதிகள் என்று ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் சலுகைகள் கிடைத்துக் கொண்டிருக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் முக்கிய விவகாரங்களை சட்டசபையில் எழுப்பி அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை இருக்கிறது. அதேபோல சட்டசபையில் முன் வரிசையில் முதல் இருக்கையில் அமர்வதற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை இருக்கிறது தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவில் போட்டி ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பதவி தனக்கு வேண்டுமென்று ஓபிஎஸ் கேட்பது தான் இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஓபிஎஸ் இடம் இருப்பதைவிட இபிஎஸ் இடம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அநேக நபர்களின் கருத்தாக இருந்து வருகிறது. ஏனென்றால் அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அனைத்து துறைகளையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.அதோடு எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில்களை தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதிக்கீடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் பெயர் பிரச்சனை என்று பல பிரச்சனைகளை தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி உண்டாக்கி விட்டார். இதனால் பல இடங்களில் எதிர்ப்பு உண்டானது ஆனாலும் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் தோல்வி ஏற்படவில்லை அதற்கு காரணம் நான்தான் என்று தெரிவிக்கும் ஓபிஎஸ் ஆகவே எனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் என்று சில மூத்த தலைவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட ஈபிஎஸ் ஓ பன்னீர் செல்வத்திடம் சமாதான புறாவை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பேசி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது ஓபிஎஸ் தெரிவித்ததாவது, கட்சிக்காக என்று நீங்கள் கேட்டதால் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பொறுப்பை நான் விட்டுக் கொடுத்தேன் ஆனால் இப்பொழுது தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்கு வேண்டும் என அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக வெற்றி பெற்றிருக்கின்ற 65 தொகுதிகளில் அநேக தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் தான் இருக்கிறது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்படி அதிமுகவில் மறுபடியும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது ஆனாலும் நாளை நடைபெறவிருக்கும் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.