சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

0
254
Tourist father kills daughter Accident in Yercaud!
Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் தந்தை மகள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இது  குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (54)  இவரது மகள் யோகேஸ்வரி (27). யோகேஸ்வரிக்கும்  சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணமானது. தனது மகளை காண்பதற்காக அரியலூரில் இருந்து அவரது தந்தை  இளங்கோவன் வந்தார்.

யோகேஸ்வரி தனது அப்பாவிடம் ஏற்காடு அழைத்துச் செல்லும் படி  கேட்டுள்ளார் . இருவரும் ஏற்காடு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது 5 வது கொண்டை ஊசி வளைவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது. விபத்தின் பொழுதே யோகேஸ்வரி உயிரிழந்ததாகவும் இளங்கோவன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Previous articleயானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?
Next articleவாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!