தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது.
இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :-
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று நாகையிலிருந்து காங்கேயம் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில் இருநாட்டிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்பொழுது கப்பல் பயணத்திற்கான டிக்கெட் விலை ₹8,500 இல் இருந்து 8000 ரூபாயாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் எடுத்துச் செல்லக்கூடிய உடமைகள் 10 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை ஏழு கிலோ ஹேண்ட்பேக் எடையாகவும் 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்து செல்ல அனுமதி வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 15,000 ரூபாய்க்கு 2 இரவு பயணம் உட்பட 3 நாள் கொண்ட சுற்றுலா திட்டமானது 30,000 ரூபாய்க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் ஆக மாற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.