”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR

Photo of author

By Vinoth

”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR

சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார்.

கடந்த மே மாதம் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டி ராஜேந்தர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரின் மகன் நடிகர் சிம்பு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நியுயார்க் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகியுள்ளார்.

இதையடுத்து இன்று அவர் சென்னை வந்து சேர்ந்துள்ளார். இதுபற்றிய தகவல் நேற்றே வெளியானது. இந்நிலையில் இன்று காலை சென்னை வந்த  அவர் ஊடகங்களை சந்தித்து பேசினார். அப்போது சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு “திருமணம் என்பது இருமணம் இணைவது. அதெல்லாம் கடவுளின் ஆசைப்படிதான் நடக்கும். சிம்புவின் நல்ல மனசுக்கு நல்ல பெண்ணாகக் கிடைப்பார்’ எனத் தனக்கே உரிய பழைய உற்சாகத்தோடு பேசினார். அதன் பின்னர் அவர் அங்கிந்து வீட்டுக்குக் கிளம்பினார்.