சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து வரிக்குறித்த சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தனர். அதன்பின் அமெரிக்காவினுடைய இறக்குமதி வரி விகிதத்தில் சிலவற்றை இந்திய அரசு குறைந்தது.
இவ்வாறு இந்திய அரசு குறைத்த வரிவிகிதம் ஆனது அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரி விகிதத்தை விட 10 சதவிகித புள்ளிகள் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து 100% ஆக இந்திய அரசு குறைத்து இருக்கிறது. இவ்வாறு இந்திய அரசு செய்தது அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு மிகவும் பயனளிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிபர் அவர்கள் தொடங்கிய வர்த்தக போரில் வரிவிதிப்பு குறித்து வெளியிட்ட நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் உடைய பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவின் மீது அதிக அளவு வரி விதித்திருக்கக்கூடிய இந்தியா மற்றும் தாய்லாந்து இரண்டு நாடுகளின் மீதும் அதிபற்றம் வர்த்தகப் போரை துவங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மீது இந்த வர்த்தகப் போர் துவங்கும் நிலையில் இந்தியாவில் சில முக்கியமான ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோ மொபைல்ஸ் ஏற்றுமதி போன்றவை 15 சதவிகிதம் வரை பாதிப்பை சந்திக்கும் எனவும் மருந்து பொருட்களின் ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை பாதிப்பை சந்திக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. இவை மட்டுமில்லாத நகைகள் சார்ந்த துறை மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த துறை என அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை சந்திக்க நேரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.