போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் மையப் பகுதியாக சேலம் மாறி வருகின்றது.

இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் மாத்திரைகள், டின்னர் ,சொலுசன் போன்ற போதைப்பொருட்களின் அடிமையாவது தொடர்ந்து அரங்கேறி வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது . இந்நிலையில், இதய வலி மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் சில மருத்துவ மருந்து கடைகளில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது. பின்னர் இது குறித்து விசாரித்ததில் ஒரு தனியார் குடோனில் 7 இலட்சம் மருந்துகள் பறிமுதல் செய்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.