மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு
சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் நிறுவனத்தின் விளம்பர பேனர் விபத்து ஏற்படுத்தும் நிலையில் வைக்கபட்டிருந்தது.
இந்த ஆபத்தான வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அங்கு போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியை மேற்கொண்டிருந்த போக்குவரத்து காவலரான பாஸ்கர்ராஜா, தக்க நேரத்தில் அந்த பேனரை வைத்தவரை வைத்தே, அகற்றிய செயல் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
இதுபோன்று அத்துமீறி சட்ட விரோதமாக பொறுப்பற்ற தன்மையில் செயல்படும் நபர்கள் மீது சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.