திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி

0
105
#image_title

திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி

திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து ஐந்து பேர் பலியான சம்பவத்தில் வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதீவேகம் காரணமாக விபத்து நடந்ததாக மோட்டார் வாகனத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி கே.டி.சி நகர், சண்முகாபுரத்தில் இருந்து நேற்று முந்தினம் ஒரு வேனில் 21 பேர் வந்தனர். மூணாறு அருகே தொண்டிமலை என்ற இடத்தில் செல்லும் போது, அங்குள்ள ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த பெருமாள் (59), வள்ளியம்மாள் (70) சுசீந்திரன் (8) சுதா(20) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜானகி (55) என்ற இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதன்மூலம் மூணாறு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இப்போது வேன் கவிழ்ந்த சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விபத்து நடந்த இடத்தில் இடுக்கி போக்குவரத்து ஆர்டிஓ நாசர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியனர்.விபத்திற்கு ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதீவேகம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் இதனால் இந்த பகுதியில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வளைவுகளை அடையாளம் காண சாலை அடையாளங்கள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். சாலையின் குறுக்கே ஒளிரும் விளக்குகள் மற்றும் ரப்பர் பட்டைகள் தற்காலிக தீர்வுகளாக பரிந்துரைக்கப்பட்டன.

ஆய்வை தீவிரப்படுத்தவும், கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை தயார் செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார். விபத்துகளை குறைக்கும் வகையில், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினருடன் இணைந்து சாலையில் வாகன தணிக்கை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

author avatar
Savitha