நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட இதுபோன்ற பல துர்சம்பவங்களுக்கு காரணமாக, இருப்பது மதுதான்.அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தாலும் அரசாங்கமும் அதிலிருந்து வரும் லாபத்தை மட்டும்தான் பார்க்கிறதே தவிர பொது மக்களின் வாழ்க்கை சீரழிவை கொஞ்சமும் நினைத்துப் பார்ப்பதில்லை.
மாறாக இந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வந்தது? அடுத்த மாதம் எவ்வளவு வருமானம் வரும்? 1 வருடத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பதை மட்டுமே அரசாங்கம் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில், சென்னை செங்குன்றத்தையடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான மாரி பள்ளிப்படிப்பை முடித்தவர். எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்திருக்கிறார்.
இதற்கு நடுவே சென்ற திங்கள்கிழமை இவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு இவர் கிருஷ்ணா நகர் பகுதியிலுள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கூடியிருக்கிறார்.
அப்போது திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார் நண்பர்கள் அவரை தட்டி எழுப்பியும் எழததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மாரியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் உடன் வந்த நண்பர்கள் லோகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்டோரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுபோதையில் விளையாட்டாக நினைத்து செய்தது கொலையில் முடிந்து விட்டதாக வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்கள்.
அதாவது மது போதையிலிருந்த மாரியை அவருடைய நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்போதுதான் அவர் மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.அதோடு மயங்கி விழுந்த மாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து லோகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்டோரை கொலை வழக்கில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.