அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்! துள்ளி குதித்த ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி!

0
68

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும், பள்ளி தினங்களிலிருந்து உறவுமுறையில் பழகி வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், அவர்கள் கல்லூரிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களுடைய நட்பு தொடர்ந்திருக்கிறது. பட்டப் படிப்பை முடித்தவுடன் பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாடகைக்கு வீடெடெடுத்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவரத்தை அறிந்து கொண்ட இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்ற வாரம் பாத்திமா அவர்களுடைய உறவினர்களால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அதிலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் தான் என்னுடைய துணைவியார் பாத்திமா அவர்களும் குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.

தன்னுடன் தங்குவதற்காக வருகைதந்த பாத்திமாவை அவருடைய குடும்பத்தினர் கடத்திச் சென்றதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பாத்திமாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டது, அதே சமயத்தில் மனுதாரர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடந்த விசாரணையின்போது ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு எந்தவிதமான தடையுமில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதோடு ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கையும் அவர் முடித்து வைத்திருக்கிறார்.

இந்த தீர்ப்பு தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அதிலா ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்திடமிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைத்திருப்பதாகவும், கேரள உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக, நாங்கள் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஆனாலும் நாங்கள் இன்னமும் முற்றிலுமாக சுதந்திரமடையவில்லை எங்களுடைய குடும்பங்கள் இன்னும் எங்களை அச்சுறுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.