தெரு நாய்களால் ஏற்படும் விபரீதம்!! புதிய வரைவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..

Photo of author

By Gayathri

தமிழ்நாட்டில் ஏறத்தாழ ’13 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள்’ உள்ளன. இவற்றுள் ‘நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் யாரது கவனிப்பும் இன்றி தெரு நாய்களாக அலைந்து திரிந்து வருகின்றனர்’. தெரு நாய்களின் வெறித்தனம் காரணமாக,’இந்த வருடம் மட்டுமே மூன்று லட்சத்து 30 ஆயிரம் நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்’. ‘நாய் கடித்தும் சிகிச்சைக்கு வராதவர்கள் எத்தனையோ?’ மேலும் தெரு ‘நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது’.

‘இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்’. “இதன் காரணமாக தமிழக அரசு, பிற நாடுகளில் நடைமுறையில் இருந்து வெற்றி கரமாக செயல்பட்ட வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை நம் நாட்டிலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது”.

‘ தமிழக மாநில அரசின் திட்டக்குழு தனி வரைவு கொள்கையை வகுத்துள்ளது. முதலில் நாய்களின் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது’. மேலும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முனைந்துள்ளது. மேலும் அனைத்து ”தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தடுப்பூசி போட்ட நாய்களுக்கு அடையாளக் குறியீடு கட்டாயமாக இட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.

‘ மேலும் அரசு கால்நடை மருத்துவமனையில் தெரு நாய்களுக்கு முடிந்தவரை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் இதற்காக நடமாடும் வாகனங்களும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு என்றே திறன் மிக்க பயனையாளர்களை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளது’.

இதற்கு காரணம், ‘கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று லட்சத்து 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் நாய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரு நாய்களின் மூலம் உயிர் கொல்லி நோய் ரேபிஸ் மட்டும் பரவுதல் கிடையாது. அதைத் தவிர நுண் கிருமிகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாய்களின் நடமாட்டத்தினால் அதிக அளவு விபத்தும் ஏற்படுகின்றது. நாட்டிலேயே நாய் கடிகள் மிகுந்த மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது’ என்பது குறிப்பிடத்தக்கது.