நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் போது நேர்ந்த விபரீதம்!! சோகத்தில் ரசிகர்கள்!! 

0
152
Tragedy happened during actor Surya's birthday celebration!! Fans in sadness!!
Tragedy happened during actor Surya's birthday celebration!! Fans in sadness!!

நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் போது நேர்ந்த விபரீதம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில்  1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார்.

தற்போது அவர் கமலுடன் இணைத்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு பெற்றார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்.

நேற்று சூர்யா பிறந்த நாள் ரசிகர் மூலம் சிறப்பாக கொண்டப்பட்டது. ஒவ்வொரு நடிகர், நடிகையும் அவரிகளின் பிறந்த நாளுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வழக்கமான ஒன்று. இதனால்  சில நாட்கள் முன்பே இவர் பிறந்தநாளை ஒட்டி சூர்யா ரசிகர்கள் வடசென்னையில் அவர்கள் ரசிகர் உணவகத்தில் இலவச உணவு வழங்க உள்ளார்கள். ஒரு மாதம் சலையோரா வாசிகளுக்கு உணவுகள்  வழங்கப்பட்டது.

இது தினமும்  காலை 10  மணி முதல் இரவு 10  மணி வரை இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சூர்யா பிறந்த நாளை சிறப்பாக அவர் ரசிகர்கள் கொண்டாடினர். தமிழ் நாடு மட்டுமின்றி அவர் பிறந்த நாளை ஆந்திரா மாநிலத்திலும் கொண்டப்பட்டது. அதனையடுத்து ஆந்திராவில் அவருக்கு கட் அவுட்கள் அதிக அளவு வைக்கப்பட்டது. அந்த நிலையில் கட் அவுட் வைத்து கொண்டியிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து இரண்டு இளைஞர்கள் உயிர் இழந்தனர்.

அதனை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா உயிழந்த ரசிகர் குடும்பத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவருகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

Previous articleதக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!
Next articleநடிகையின் செயலை வெறுத்த தோனி!! காரணம் என்னவாக இருக்கும்??